பூட்டை உடைத்து அரசு பள்ளியில் டிவி கம்ப்யூட்டர் திருட்டு

மேச்சேரி, ஜூலை 16: மேச்சேரி அருகே, அரங்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் பூட்டை உடைத்து கம்ப்யூட்டர், டிவி உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேச்சேரி அருகே உள்ள அரங்கனூரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 280 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 12ம் தேதி மாலை 5 மணிக்கு, வகுப்பறைக பூட்டி விட்டு, ஆசிரியர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர். நேற்று (திங்கட்கிழமை) வழக்கம்போல் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், தலைமையாசிரியர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் அலுவலக பயன்பாட்டிற்கு வைத்திருந்த கம்ப்யூட்டர், டிவி உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து உடனடியாக மேச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், பள்ளிக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், தலைமை ஆசிரியர் சாந்தி கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்து, பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

சாலையில் நடந்து சென்றபோது

கார் மோதி 2 பேருக்கு கால்முறிவுகெங்கவல்லி, ஜூலை 16: தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்தவர்கள் சின்னுசாமி, சம்பத். இவர்கள் நேற்று முன்தினம் கொத்தனார் வேலைக்காக, கெங்கவல்லி நடுவலூருக்கு வந்தனர். அங்கு வேலை முடித்துவிட்டு, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே வந்த கார், இவர்கள் மீது அதிவேகத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவருக்கும் கால்முறிவு ஏற்பட்டது. வலியில் துடித்துக்கொண்டிருந்த 2 பேரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

டூவீலர்

திருடியவர் கைதுஓமலூர், ஜூலை 16: ஓமலூர் அருகே காமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல்(55). ஓமலூர் பஸ் நிலையத்தில் எலுமிச்சை பழ கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம், தனது டூவீலரை கடைக்கு அருகில் நிறுத்திவிட்டு, வியாபாரம் செய்து கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது, டூவீலரை காணவில்லை. இதுகுறித்து ஓமலூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்ததில் அவரது டூவீலரை ேமல்காமாண்டப்பட்டியைச் சேர்ந்த அழகப்பன்(42) என்பவர் திருடிச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவரை ைகது செய்தனர். மேலும், டூவீலரை மீட்டு ரத்தினவேலிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: