ஓமலூரில் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் மாநாடு

ஓமலூர்,  ஜூலை 16: ஓமலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் 7வது மண்டல மாநாடு நடைபெற்றது. மண்டல தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர்கள் பொன்னுசாமி, அல்லிராணி, மாவட்ட துணை செயலாளர் ரத்தினம் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணன் வரவேற்று பேசினார். மூத்த உறுப்பினர் வேலு கொடியேற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை, மாவட்ட உதவி தலைவர் கருப்பண்ணன் வாசித்தார். மாநில துணை பொது செயலாளர் செல்வராஜன் துவக்க உரையாற்றினார். மண்டல செயலாளர் அன்பழகன் வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் அழகேசன் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். மாநில தலைவர் கிருஷ்ணன், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.கூட்டத்தில் மாநில துணை பொது செயலாளர்கள் தேவராஜன், கர்சன், மாநில துணை தலைவர்கள் கந்தசாமி, வாசன், மாநில துணை செயலாளர் குப்புசாமி, சந்திரசேகரன், தங்கவேல், செல்வராஜ் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். அமைப்பு நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: