மாவட்டம் முழுவதும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

சேலம், ஜூலை 16: சேலம் மாவட்டத்தில், பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் காமராஜரின் 117வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஓமலூர் பஸ் ஸ்டாண்டில், சேலம் மேற்கு மாவட்ட தமாகா தலைவர் சுசீந்திரகுமார் தலைமையில், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  பின்னர், மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இதில், ராஜேந்திரன், மணிகண்டன், கிருஷ்ணராஜ், ரகுநந்தகுமார், சச்சு, உட்பட பலர் கலந்து கொண்டனர். ஓமலூர் அருகே பச்சனம்பட்டி கிராமத்தில், தமாகா தொழிற்சங்கம் சார்பில் சின்னையன் தலைமையில், காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வட்டார தலைவர் சக்திவேல் தலைமையில், சந்திரசேகரன், மாரியப்பன், கந்தசாமி, வேலு, அழகேசன், சக்தி உட்பட பலர் மரியாதை செலுத்தினர்.காமலாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியர் அசோகன், ஒன்றிய ஆணையாளர் விஜயலட்சுமி, காமராஜரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் சார்பில் ஆசைதம்பி, ரவிசந்திரன், வெங்கடேசன், லட்சுமணன், குமார், சௌந்தராஜன் ஆகியோர் பள்ளி குழந்தைகளுக்கு, வாழை இலை போட்டு அறுசுவை உணவு வழங்கினர்.

கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில்,  பள்ளி மேலாண்மைக் குழு மீனாம்பிகா, தலைமை ஆசிரியர்   செல்வம் ஆகியோர், காமராஜர் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஆசிரியை ஜெயமணி, கல்பனா குத்துவிளக்கு ஏற்றினர். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆத்தூர்: சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், சாரதா ரவுண்டனா, முள்ளுவாடி, கோட்டை பகுதியில் உள்ள காமராஜரின் சிலைக்கு, மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில், சக்கரவர்த்தி, முருகேசன், பாஸ்கர், குமார், தங்கராஜ், முகிலரசன், பெரியசாமி, சதீஷ், நேதாஜி, அம்பாயிரம், கோட்டை செந்தில், சம்பத், கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியை அமுதா தலைமையில், குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை ஜெயமணி, பள்ளி மேலாண்மை குழு தலைவி புவனேஸ்வரி இசக்கி, ஆசிரியர் ஜோசப்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, 117 வடிவில் மாணவ, மாணவிகள் யோகாசனம் செய்து அசத்தினர்.

இளம்பிள்ளை:இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், காமராஜரின் பிறந்த நாளையொட்டி, 706 மாணவிகளுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் குழந்தைவேலு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வருதராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.வாழப்பாடி:வாழப்பாடியில், வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் பள்ளி மாணவர்கள் மூலம் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. சத்துணவு பணியாளர் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. விழாவில், பாலமேடு வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், வாழப்பாடி சத்துணவு துறை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யா, வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவிசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தாரமங்கலம்:தாரமங்கலம் எம்.ஜி.ஆர் காலனியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிடிஏ தலைவர் பழனிவேல், தலைமையாசிரியர் பழனிசாமி தலைமை வகித்தனர். காமராஜர் நற்பணி மன்றத்தை சேர்ந்த தமிழ்மணி, முனியப்பன் ஆகியோர் ₹15 ஆயிரம் மதிப்புள்ள மேஜை, நாற்காலிகளை பள்ளிக்கு பரிசாக வழங்கினர். இதேபோல், சன்னதிவீதி அரசு தொடக்கப்பள்ளியிலும் காமராஜர் பிறந்தநாள் விழா, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மாதேசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. தாரமங்கலம் வட்டார காங்கிரஸ் சார்பில் நடந்த விழாவிற்கு, முத்துசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செங்கோட்டையன் இனிப்பு வழங்கினார். மயில்வாகனன், சண்முகம், மயில் பிரகாசம், ரத்தினம், அருணாசலம் அர்த்தனாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தாரமங்கலத்தில் தமாக சார்பில், காமராஜர் சிலைக்கு துணை தலைவர் செல்வமணி  மாலை அணிவித்தார்.

ஓமலூர் நீதிமன்றத்தில்

கண் பரிசோதனை முகாம்ஓமலூர், ஜூலை 16: ஓமலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. ஓமலூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நடைபெற்ற முகாமை, சார்பு நீதிபதி தயாநிதி துவக்கி வைத்தார். குற்றவியல் நடுவர் மாலதி முன்னிலை வகித்தார். இந்த முகாமில், கண் மருத்துவர் சுஜாதா தலைமையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதில், கண் புரை, சர்க்கரை கண் நோய், கண் நீர் அழுத்தம், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் வடிதல், வறண்ட கண் எரிச்சல், ஒற்றை தலைவலி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும், குறைந்த விலையில் கண் கண்ணாடிகள், குறைந்த கட்டணத்தில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. முகாமில், ஓமலூர் வழக்கறிஞர் சங்க தலைவர் கோபால், முன்னால் தலைவர்கள் சிவராமன், நடராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: