கொங்கணாபுரத்தில் 5000 மூட்டை பருத்தி ₹1.10 கோடிக்கு ஏலம்

இடைப்பாடி, ஜூலை 16:  கொங்கணாபுரம் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 500 மூட்டை பருத்தி ₹1.10 கோடிக்கு ஏலம் போனது.இடைப்பாடி அருகே, கொங்கணாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து 5000 மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் பிடி ரகம் குவிண்டால் ₹5700 முதல் 6259 வரையும், சுரபி பருத்தி குவிண்டால் ₹5950 முதல் 6590 வரையும் ஏலம் போனது. மொத்தம் 5000 மூட்டை பருத்தி ₹1.10 கோடிக்கு ஏலம் போனது. இன்று கோனேரிப்பட்டி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பருத்தி ஏலம் நடக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: