ஆத்தூரில் 54.4மி.மீ., மழை பதிவு

சேலம், ஜூலை 16: ஆத்தூரில் 54.4மி.மீட்டர் மழை பதிவானது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.  கடந்த சில நாட்களாக காலையில் வெயிலும், மாலையில் மழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் மரங்கள் சாய்ந்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் பூமி குளிர்ந்து, வெப்பம் தணிந்தது. மிக அதிகபட்சமாக ஆத்தூரில் 54.4 மில்லி மீட்டர் மழை பதிவானது.  மாவட்டத்தில் நேற்று முன்தினம்  பெய்த மழையின் அளவு(மில்லி மீட்டரில்) வருமாறு: ஆத்தூர்- 54.4, கெங்கவல்லி- 6.4 என மொத்தம் 60.8 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: