இளம்பெண் மாயம்

திருக்கோவிலூர், ஜூலை 16:

திருக்கோவிலூர் அருகே நெடுமுடையான் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி மகள் தனலட்சுமி (19). இவரை பெற்றோர் அருகில் உள்ள பொ.மெய்யூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு பெங்களூரில் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் உறவினர் வீட்டில் இருந்த தனலட்சுமி திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் அவரது தாயார் அல்லி கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் குணபாலன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: