மயிலத்தில் கழிவு நீர் கால்வாய் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

மயிலம்  ஜூலை 16: மயிலம் சன்னதி வீதி திண்டிவனம் - புதுச்சேரி சாலையில்  பஸ் நிலையம் அருகில் கழிவு நீர் கால்வாய் பகுதியில் குப்பைகள் அடைத்துக் கொண்டு கடும் துர்நாற்றம் வீசியது. மேலும் மலேரியா, டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் நோய்களை உற்பத்தி செய்யும் கொசுக்கள் உற்பத்தி கேந்திரமாகவும் இருந்தது. இதனால் கிராம மக்களுக்கு   தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படும் சூழல் இருப்பதாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.

இதனை தொடர்ந்து உள்ளாட்சி துறை சார்பில் கால்வாய் சீரமைக்கும் பணிகள் நேற்று துவங்கியது. இந்த  பணிகள் துவங்கியதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: