பு.கிள்ளனூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

உளுந்தூர்பேட்டை, ஜூலை 16: உளுந்தூர்பேட்டை அருகே பு.கிள்ளனூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கால்நடை மருத்துவர்கள் தமிழ்மணி, சங்கர்கணேஷ், பரத் ஆகியோர் கொண்ட கால்நடை மருத்துவக்குழுவினர் கிள்ளனூர், நாச்சியார்பேட்டை  மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடப்புழு நீக்கம், சினைபரிசோதனை, தாது உப்பு குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் கண்டறிந்து சிகிச்சை அளித்தனர்.  இதில் கலந்துகொண்ட திருக்கோவிலூர் கோட்ட கால்நடை உதவி இயக்குனர் தமிழரசு கால்நடை வளர்ப்பவர்களுக்கு சத்து உப்புகள், மருத்துவ உதவிக்கான அட்டைகளை வழங்கி கால்நடைகளை பாதுகாக்கும் முறைகள் குறித்து விளக்கி பேசினார்.கால்நடை மருத்துவமனை பணியாளர்கள் வெங்கடேசன், விஜயக்குமார், மணிவாசகம் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: