காவல்துறை சார்பில் அரசு பள்ளியில் நூலகம்

திருவெண்ணெய்நல்லூர், ஜூலை 16: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த இருவேல்பட்டு பகுதியில் நூலகம் இல்லாததால் அந்த ஊரைச்சேர்ந்த சமூக ஆர்வலர் தனஞ்செழியன் கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் நூலகம் வேண்டி மனு கொடுத்தார். இதையடுத்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இருவேல்பட்டு பகுதியில் நூலகம் ஆரம்பிக்க திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலைய அதிகாரிக்குஉத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், தனிப்பிரிவு ஏட்டு இளையராஜா உள்ளிட்ட போலீசார் சுமார் 300புத்தகங்கள் அடங்கிய நூலகம் ஆரம்பிக்க ஏற்பாடு செய்தனர்.  இந்நிலையில், நேற்று மாலை நூலக திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைத்தார். தலைமை ஆசிரியர் சிவகாமசுந்தரி வரவேற்றார். முக்கியஸ்தர்களான முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோழன் ரூ. 10ஆயிரமும், ஆடிட்டர் ராஜிவ்காந்தி ரூ. 2ஆயிரமும் நூலக வளர்ச்சிக்காக வழங்கினர். இதில் சமூகஆர்வலர் அருள்புத்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: