கல்லூரியிலிருந்து டிசியை பெற்றுத்தர ஆட்சியரிடம் மனு

விழுப்புரம், ஜூலை 16: விழுப்புரம் அருகே

பனங்குப்பத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வறுமையில் உள்ள நான் பொறியியல் படிப்புக்காக கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வில் கலந்துெகாண்டு திருநாவலூர் தனியார் பொறியியல் கல்லூரியை தேர்வு செய்தேன். ஆனால் குடும்பசூழ்நிலைகாரணமாக கல்லூரிக்கு ஒருநாள்கூட செல்லமுடியவில்லை. இதனால் தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்குச்சென்றேன். இதனிடையே கல்லூரியில் சேர்க்கைக்காக வாங்கிவைக்கப்பட்ட என்னுடைய 12ம் வகுப்பு மதிப்பெண், மாற்றுச்சான்றிதழ்களை தரமறுக்கின்றனர். எனவே ஆட்சியர் நடவடிக்கை எடுத்து மாற்றுச்சான்றிதழ் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: