இரவு நேரத்தில் இருளில் மூழ்கி கிடக்கும் ேமம்பாலம்

திருக்கோவிலூர், ஜூலை 16: திருக்கோவிலூரில் இருந்து விழுப்புரம், திருவண்ணாமலை சாலையை இணைக்க தென்பெண்ணையாற்றில் மேம்பாலம்  கட்டப்பட்டது. இந்த பாலத்தில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு சோடியம் லைட் பொருத்தப்பட்டு, பேரூராட்சி மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஆறு மாதத்திற்கு முன் புதிதாக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு அதில் எல்இடி பல்புகள் பொருத்தப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் விழுப்பும், திருவண்ணாமலை, பெங்களூரு, வேலூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றன. இந்நிலையில், கடந்த ஓரு மாதமாக பாலத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாத காரணத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மேம்பாலத்தில் உள்ள மின் விளக்குகளை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: