விழுப்புரம் அரசு பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா

விழுப்புரம், ஜூலை 16: விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி மாணவிகளுக்குவாசிப்பு பழக்கம் ஏற்படுத்தும் வகையில் வாசிப்பு இயக்கம் நடத்தப்பட்டது. மாணவிகளுக்கு பல்வேறு நூல்கள் வழங்கப்பட்டு வாசித்தனர். மாவட்ட நூலக அலுவலர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு இதனை துவக்கிவைத்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனுசாமி கலந்து கொண்டு பேசினார். நூலக அலுவலர்கள் இளஞ்செழியன், வேல்முருகன், ஆரோக்கியம், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போல் விழுப்புரம் மத்திய மாவட்ட தமாகா சார்பில் காமராஜர் பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது. நகரத்தலைவர் ஹரிபாபு தலைமை தாங்கினார். மாவட்டத்தலைவர் தசரதன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். நிர்வாகிகள் ரஞ்சித்குமார், பார்த்தீபன், கோபால், ஜெயபால், குணசேகரன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: