மக்கள் கோரிக்கை விளக்க கூட்டம்

உளுந்தூர்பேட்டை, ஜூலை 16: உளுந்தூர்பேட்டை அருகே நாச்சியார்பேட்டை கிராமத்தில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மக்கள் கோரிக்கை விளக்க கூட்டம் கிளை செயலாளர் கலாமணி தலைமையில் நடைபெற்றது. கிளைத் தலைவர் செல்வம் வரவேற்றார். பரமசிவம், முருகேசன், கலியபெருமாள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வெங்கடேசன், நாச்சியார்பேட்டை ஊராட்சியில் கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். தெருக்களில் இரண்டு புறத்திலும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும். வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி பேசினார். இதில் மாவட்ட குழு கலியமூர்த்தி, செண்பகவள்ளி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: