ஆலமரம் விழுந்ததில் கோயில் சிலைகள் சேதம்

ரிஷிவந்தியம், ஜூலை 16: ரிஷிவந்தியம் அருகே லா-கூடலூர் ஊராட்சிக்குட்பட்ட சேரந்தாங்கல் கிராமத்தின் ஏரிக்கரையில் முனியப்பன் கோயில் அருகில் உள்ள மிக பழமை வாய்ந்த ஆலமரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென வேரோடு அருகிலுள்ள முனியப்பன் கோயில் மீது சாய்ந்தது. இதில் முனியப்பன் கோயிலின் சுற்றுச்சுவர், சிலைகள் சேதமடைந்தன. பழமை வாய்ந்த ஆலமரம் வெயில் காலங்களிலும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு நிழலாகவும் இருந்து வந்தது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மழை பெய்ததால், ஆலமரத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டதால், ஆலமரம் வேரோடு சாய்ந்தது. இம்மரம் அவிரியூர் சேரந்தாங்கல் வழியாக கீழதேனூர் செல்லும் சாலையில் விழுந்து கிடக்கிறது. அவற்றை அதிகாரிகள் அகற்றவில்லை என கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இம்மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertising
Advertising

Related Stories: