மயில்களை பாதுகாக்க கோரிக்கை

உளுந்தூர்பேட்டை, ஜூலை 16: உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்புகாடுகள் உள்ளது. இந்த காப்புகாடுகளில் அதிகளவு மான்கள் மற்றும் மயில்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளது. இந்த காப்பு காடுகளை ஒட்டியுள்ள புல்லூர், குணமங்கலம், உளுந்தூர்பேட்டை, வெள்ளையூர், பாண்டூர் உள்ளிட்ட கிராமங்களில் அதிக அளவு மான்கள் வயல்வெளிப்பகுதிக்கு உணவுதேடி வருவது போல் கடந்த சில மாதங்களாக மயில்களும் விவசாய நிலங்களில் உணவுதேடி வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இதே போல் உளுந்தூர்பேட்டை நகர பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் அதிக அளவிலான மயில்கள் வந்து செல்கிறது. இந்த மயில்கள் அதிகாலை நேரத்தில் வயல்வெளிப்பகுதிக்கு வந்து நெல் உள்ளிட்ட உணவுகளை தின்றும், தண்ணீர் குடித்தும் செல்கிறது. இது போல் நகர பகுதிகளுக்கு வரும் மயில்களை இறைச்சிக்காக சில சமூக விரோதிகள் வேட்டையாடி வருவதால் மயில் இனம் அழிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து காப்பு காடுகளில் இருந்து நகர பகுதிக்கு இரைதேடி வரும் மான்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: