கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரகளை கருப்பு பேட்ஜ் அணிந்து டாக்டர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம்

வில்லியனூர், ஜூலை 16:  வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சிபேட் பகுதியை சேர்ந்த ஜெயவேல் (19) நேற்று முன்தினம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அவரை கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து உடலை கொண்டு செல்ல உறவினர்கள் ஆம்புலன்ஸ் கேட்டனர். அதற்கு ஊழியர்கள் மறுத்ததால் ஆத்திரமடைந்தவர்கள் மருத்துவமனை மற்றும் ஆம்புலன்சை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவர்களை தாக்க முயற்சி செய்தனர். தகவலறிந்த மங்கலம் இன்ஸ்பெக்டர் பழனிவேல், சப்-இன்ஸ்பெக்டர் தயாளன், கதிரேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதின்பேரில் ஜெயவேல் உறவினர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து மருத்துவர்கள் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று காலை பணிக்கு வந்த மருத்துவர்கள், ஊழியர்கள் ரகளையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி முதற்கட்டமாக கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 8.30 மணிமுதல் 9.30 மணி வரை நடந்த இந்த போராட்டத்தால் புற
நோயாளிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். மேலும் ரகளையில் ஈடுபட்டவர்களை கைது செய்யவில்லையென்றால் அனைத்து மருத்துவமனையிலும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ஓய்வூதியர்களுக்கு 7வது ஊதியக்குழு, மருத்துவ காப்பீட்டு தொகை நிலுவை