உளவாய்க்கால் நான்குமுனை சந்திப்பில் சிசிடிவி கேமரா

வில்லியனூர், ஜூலை 15:  வில்லியனூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் திருட்டு, வழிப்பறி, ெகாலை முயற்சி, மாமூல் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதுபோன்ற குற்ற சம்பங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் சிசிடிவி கேமரா பொருத்துமாறு வணிகர்கள் மற்றும் ெபாதுமக்களிடம் போலீசார் வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி கடைகள், கம்பெனிகள், மதுக்கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தி வருகின்றனர்.  இந்நிலையில் உளவாய்க்கால் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம கும்பல் ஒன்று தொழிலதிபர் ஒருவரை கொலை ெசய்ய முயற்சி ெசய்தது. அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பது போலீசாருக்கு கடும் சவாலாக இருந்து வந்தது. இதுபோன்று எதிர்காலத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்கள், கோனேரிக்குப்பம் பகுதியில் நடக்கும் மணல் திருட்டு ஆகியவற்றை கண்காணிக்கும் வகையில், உளவாய்க்கால் நான்கு முனை சந்திப்பில் சிசிடிவி கேமிரா பொருத்த  இன்ஸ்பெக்டர் பழனிவேல், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து அப்பகுதியில் தனியார் பங்களிப்புடன் வில்லியனூர் போலீசார் புதிதாக சிசிடிவி கேமிரா பொருத்தியுள்ளனர். இதனால் மணல் கொள்ளையர்கள் பயந்து, தற்போது மணல் திருட்டை நிறுத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: