தாழ்வாக செல்லும் மின்கம்பி சரி செய்ய மக்கள் கோரிக்கை

வில்லியனூர், ஜூலை 16: வில்லியனூர் பெருமாள் கோயில் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடியுருப்புகள் உள்ளன. இந்த தெருவுக்கு செல்லும் வழியில் மின்கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். கைக்கு எட்டும் தூரத்தில் மின்கம்பி செல்வதால் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளதால் இந்த மின்கம்பி மூலம் எப்போது வேண்டுமானாலும் அசம்பாவிதம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதுசம்பந்தமாக அப்பகுதி மக்கள் மின்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். எனவே உடனடியாக தாழ்வாக செல்லும் மின்கம்பியை சீரமைக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: