குழந்தைகள் பொறுப்புணர்வு திட்டம் துவக்கம்

புதுச்சேரி, ஜூலை 13:    புதுச்சேரி பள்ளி கல்வித்துறை மற்றும் அரபிந்தோ சொசைட்டி சார்பில் குழந்தைகள் மீதான நமது பொறுப்புணர்வு திட்டம் (ஓஆர்சி) கேரளத்தை தொடர்ந்து புதுச்சேரியில் துவங்கப்பட்டுள்ளது. இப்புதிய முறை கல்வித்திட்டம் தொடர்பான பயிற்சி வகுப்புகள் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்கட்டமாக 15 அரசு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதன் தொடக்க நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு தலைமை தாங்கினார். இதில் கேரள மாநில ஓஆர்சி திட்ட அதிகாரி ஐஜி விஜயன் கலந்து கொண்டு பேசுகையில், சிறைகளில் நெரிசல் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெற்றோர், ஆசிரியர், சமூகம்தான்.   பெற்றோர், ஆசிரியர், சமூகம் இணைந்து செயல்பட்டால் குற்றங்களை தடுக்க முடியும். இத்திட்டத்தின் கீழ் கேரளத்தில் 1.5 லட்சம் குழந்தைகள் பயிற்சி பெற்றுள்ளனர். தற்போது 60 ஆயிரம் குழந்தைகள் பயிற்சியில் உள்ளனர் என்றார்.அரவிந்தோ சொசைட்டி செயற்குழு உறுப்பினர் விஜய் பாடர் பேசுகையில், குழந்தைகளை சமூகத்தில் திறன்மிக்கவர்களாக உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கம். இக்கல்வி முறை மூலம் மாணவ சமுதாயம் தன்னம்பிக்கையை வளர்க்க முடியும். ஆசிரியர்கள் பயிற்சிக்கு பிறகு 15 பள்ளிகளிலும் 40 மாணவர்கள் கொண்ட ஸ்மார்ட் குழு அமைக்கப்படும். அவர்கள் அப்பள்ளியை மாதிரி பள்ளியாக மாற்றுவர் என்றார்.

Related Stories: