×

கடல் சாகச குழு புதுவை திரும்பியது

காரைக்கால், ஜூலை 16: புதுச்சேரியில் இருந்து காரைக்கால் சென்ற பாய்மர படகு கடல் சாகச குழு, காரைக்கால் மார்க் துறைமுகத்திலிருந்து நேற்று மீண்டும் புதுச்சேரி புறப்பட்டது.தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் என்சிசி தலைவர் கமாண்டர் மலேக்ரெட்டி வழிகாட்டுதலின்பேரில், புதுச்சேரி கமாண்டர் தினகரன் தலைமையில், 60 என்சிசி மாணவ, மாணவிகள் கொண்ட பாய்மர படகு கடல் சாகச குழுவினர், கடந்த 9ம் தேதி புதுச்சேரியிலிருந்து புறப்பட்டனர். இந்த குழுவின் பயணத்தை அமைச்சர் கமலக்கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பரங்கிப்பேட்டை, பழையாறு கடலூர் வழியாக நேற்று முன்தினம் காரைக்கால் மார்க் துறைமுகத்திற்கு அக்குழுவினர் சென்றனர். தொடர்ந்து நேற்று காலை மீண்டும் அதே வழியாக புதுச்சேரிக்கு புறப்பட்டனர். என்சிசி மாணவர்கள் கடலில் செல்லும்போது, பாய்மர படகு ஓட்டும் பயிற்சி, கடல்சார் பயிற்சி, கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை துப்புரவு செய்தல், கடலோர கிராமங்களில் கடல் தூய்மை, சுற்றுப்புற தூய்மை, மரம் நடுதலின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்றனர். நிகழ்ச்சியில், மார்க் துறைமுக அதிகாரிகள், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...