மத்திய அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்

புதுச்சேரி, ஜூலை 16: தமிழகம், புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற துடிக்கும் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மனித சங்கிலி போரட்டம் நடக்கிறது. இதுதொடர்பாக புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்திலும் புதுச்சேரியிலும் விளை நிலங்களையும், கடல் வளத்தையும் சீர்குலைக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற துடிக்கும் மக்கள் விரோத மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து இன்று (16ம் தேதி) மாலை 5 மணியளவில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. மதசார்பற்ற கூட்டணி சார்பில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டம், காமராஜர் சிலை அருகில் தொடங்கி அண்ணா சிலையில் முடிவடைகிறது. விவசாயிகள், மீனவர்கள் நலன் பேணிக்காக்க, இயற்கை வளங்களை பாதுகாக்க, முதல்வர், அமைச்சர்கள், மதசார்பற்ற கூட்டணி கட்சி தலைவர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்கும் மனித சங்கிலி போராட்டத்தில் மத சார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள், அனைத்து பிரிவு தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ளுமாறு புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

Advertising
Advertising

Related Stories: