×

புதுச்சத்திரம் அருகே லாரி மோதி மின் கம்பங்கள் சேதம்

புவனகிரி, ஜூலை 16:  புதுச்சத்திரம் அருகே டிப்பர் லாரி மோதியதில்4மின் கம்பங்கள் சேதமடைந்தன. சிதம்பரம்-கடலூர் சாலையில்    உள்ள சிலம்பிமங்கலம் - பெரியப்பட்டு கிராமங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த ஒரு டிப்பர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பங்கள் மீது மோதியது.இந்த விபத்தில் 4 மின் கம்பங்கள் மற்றும் மிகம்பிகள் சேதமடைந்தன. இதுகுறித்து பரங்கிப்பேட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் டிப்பர் லாரி ஓட்டுனர் உளுந்தூர்பேட்டை சித்தாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் (39) மீது புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது