×

ஆளும்கட்சி தலையீடு தவிர்க்க வேண்டும்

கடலூர், ஜூலை 16: கடலூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகசிகாமணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்சீதாபதி வரவேற்றார். மாநில துணைத்தலைவர் புருஷோத்தமன் மாநாட்டு துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் அறிக்கை வாசித்தனர். மாநில தலைவர் சுப்பிரமணியன், துணைத்தலைவர் காந்திமதிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பல்வேறு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்திட வேண்டும். கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத நிலையில் ஒருசில ஆளும் கட்சி வட்டாரங்கள் தனி அலுவலர் அதிகார வரம்புக்குள் தலையிட்டு காசோலையில் கையொப்பம் இடுதல் மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல் போன்ற நிர்வாக நடவடிக்கைகளில் தங்களின் ஆலோசனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும் என நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார்கள். மேலும் மாவட்ட நிர்வாகத்தில் வேண்டுமென்றே தவறான குற்றச்சாட்டை தெரிவித்து பணியிட மாறுதல் நடவடிக்கை
களில் ஈடுபடுகிறார்கள். இதனை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட துணைத்தலைவர் கொளஞ்சி நன்றி கூறினார்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது