×

மாவட்ட ஆட்சித் தலைவர் அன்புச் செல்வன் பேசியதாவது:

நீதித்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து பொதுமக்களின் வழக்குகளுக்கு நல்ல தீர்வை ஏற்படுத்தி வருகிறது. முன்பு கிராமத்தில் தீர்வு காணப்படும் முறை தற்போது நடைபெற்று வருகிறது. இரண்டு தரப்பினர்களும் மன உளைச்சலிலிருந்து விடுபட்டு சமரசம் அடைவது மக்கள் நீதிமன்றத்தின் நோக்கம். மன்னிப்பு கேட்பது மனிதன், மன்னிப்பது மாமனிதன் என்பதற்கு ஏற்ப நாம் நடந்து கொள்ள வேண்டும். போட்டி மனப்பான்மை இருக்கக்கூடாது என்றார்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி செந்தில்குமார், மாவட்ட நீதிபதி (நிரந்தர மக்கள் நீதிமன்றம்) ஐயப்பன் பிள்ளை, தலைமை குற்றவியல் நீதிபதி திருவேங்கட சீனுவாசன், முதன்மை மற்றும் முதலாவது சார்பு நீதிபதி மூர்த்தி, இரண்டாவது கூடுதல் சார்பு நீதிபதி செல்வி.பிரபாவதி, கூடுதல் மாவட்ட நீதிபதி (நில எடுப்பு) கோபிநாத், செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி செல்வி.ஜோதி மற்றும் மூத்த வழக்கறிஞர் சிவமணி, வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்த மக்கள் நீதிமன்றங்களில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி, குடும்ப விவகாரம், சிறுவழக்கு, சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள் என மொத்தம் 6,800 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், ஒரே நாளில் 4,475 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.24.88 லட்சம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்கிட உத்தரவு வழங்கப்பட்டது.

Tags :
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி