மெட்ரோ ரயில் செக்யூரிட்டி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சென்னை, ஜூலை 16: சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகே மெட்ரோ ரயில் பணி நடைபெற்றபோது, பீகார் மாநிலத்தை சேர்ந்த அருண் கசாப், அஸ்சாம் மாநிலத்தை சேர்ந்த ராஜூ தத்தி (28) ஆகியோர் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தனர். அப்போது, ராஜூ தனது 1500 ரூபாயை அருணுக்கு செலவு செய்துள்ளார். இதனால் அதை திருப்பி கேட்டு வந்துள்ளார். ஆனால், அவர் தரவில்லை.இந்நிலையில் கடந்த 5.12.2016ம் ஆண்டு, இருவரும் இரவு பணியில் இருந்தபோது பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜூ, அருணை தலையில் கல்லால் தக்கி விட்டு தப்பியுள்ளார். இதை பார்த்த ஒருவர், அருணை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்துள்ளார்.

அங்கு போலீசார் நடத்திய விசாரணையில், ராஜூ தன்னை கல்லால் தாக்கியதாக அருண் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, ராஜூ மீது கொலை வழக்கு பதிவு செய்து, போலீசார் அவனை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை 18வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி சத்யா முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஜி.ஜெகதீசன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபரதமும் விதிக்கப்படுகிறது. என்று தீர்ப்பு கூறினார்.

Related Stories: