வீட்டின் முன் நின்றிருந்த கொத்தனார் அடித்து கொலை: சிறுவன் கைது

வேளச்சேரி, ஜூலை 16: வீட்டின் முன் நின்றிருந்த கொத்தனார் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறுவன் கைது செய்யப்பட்டான். வேளச்சேரி அடுத்த  பெரும்பாக்கம், நூக்கம்பாளையம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு எழில் நகரை சேர்ந்தவர் நாகராஜ் (42). கொத்தனார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் நின்றிருந்தபோது அங்கு வந்த வாலிபர், மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் திடீரென நாகராஜ் தலையில் சரமாரி தாக்கிவிட்டு தப்பினார். படுகாயமடைந்த நாகராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜ் பரிதாபமாக நேற்று மதியம் இருந்தார்.  இதுகுறித்து, பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:நாகராஜும், அதே பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி தேவர் என்பவரும் நண்பர்கள். இருவரும் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன் நாகராஜும், செல்லப்பாண்டி தேவரும் மது அருந்தினர். அப்போது,   செல்லபாண்டி போதை மயக்கத்தில் வீட்டு படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்து இறந்தார்.

Advertising
Advertising

இதையடுத்து, அவரது உறவினர்கள் வந்து பார்த்தபோது செல்லப்பாண்டி அணிந்திருந்த தங்க செயின், மோதிரம் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது. நாகராஜ், செல்லப்பாண்டியை குடி பழக்கத்திற்கு அடிமையாக்கியதால் தான் போதையில் கீழே விழுந்து இறந்தார் என்றும்,      சம்பவத்தன்று நகைகளை நாகராஜ் தான் திருடியிருப்பார் என்றும் சந்தேகப்பட்டு வந்தனர். ஆனால், நகை மாயமானதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை நாகராஜ் கூறி வந்துள்ளார். இந்நிலையில், நாகராஜ் மீது ஆத்திரம் தீராத செல்லபாண்டியின் 17 வயது மதிக்கத்தக்க பேரன், நாகராஜை இரும்பு கம்பியால்  அடித்து கொன்றுள்ளான். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் நேற்று மாலை வேளச்சேரியில் பதுங்கி இருந்த 17 வயது சிறுவனை     கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: