மொபட் மீது பைக் மோதி இன்ஸ்பெக்டர் படுகாயம்: 3 பேர் கைது

சென்னை, ஜூலை 16: கொரட்டூர் சீனிவாசபுரம், முதல் பிரதான தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி (44). சிறப்பு பிரிவு சிஐடியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர், ேநற்று முன்தினம் இரவு பணி முடிந்து வடபழனி 100 அடி சாலை வழியாக மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். கோயம்பேடு அருகே சென்றபோது, பின்னால் மின்னல் வேகத்தில் ஒரே பைக்கில் வந்த 3 வாலிபர்கள் திடீரென இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மொபட் மீது மோதிவிட்டு தப்பினர். இதில் மகாலட்சுமி நிலை தடுமாறி கீழே விழுந்து, 5 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார்.  

Advertising
Advertising

அவருக்கு இடது கால் முட்டிக்கு கீழ் முறிவு ஏற்பட்டு வலியால் துடித்தார். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் மகாலட்சுமியை மீட்டு அருகில்  உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரித்தனர். அதில், விபத்து ஏற்படுத்தியது அன்னை சத்யா நகரை சேர்ந்த புருஷோத்தமன் (30, விஜய் (19), நெசப்பாக்கத்தை பிரகாஷ் (21) ஆகியோர் என தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்.

Related Stories: