×

காமராஜர் பிறந்தநாள் விழா

திருவள்ளூர், ஜூலை16:  திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடினர்.  இந்த விழாவையொட்டி விவசாயப் பிரிவு மாவட்ட தலைவர் ஏ. அருள், வழக்கறிஞர் பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஜெ.ஹேமகுமார், விவசாய பிரிவு மாவட்ட பொதுச்செயலாளர் எல்.ஜீவாராவ், ஆர்.டி.ஐ. நகர தலைவர் பி.வீரமுத்து, ஆர்.டி.ஐ. மாவட்ட பொதுச் செயலாளர் வீ.சீனிவாச ராகவன் ஆகியோர் திருவள்ளூரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டையில் முன்னாள் முதல்வர் காமராஜர் 117 வது பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் ஊத்துக்கோட்டை காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட பிரதிநிதி கே.என்.செல்வகுமார் தலைமையில் நிர்வாகிகள் துரை, லோகநாதன், கோவிந்தசாமி, குமார் ஆகியோர் பஸ் நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.இதே போல் அதிமுக சார்பில் பேரூர் செயலாளர் ஷேக்தாவுத் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோ.சீனிவாசன், அருணாசலம் கூட்டுறவு சங்க தலைவர்கள் அண்ணாதுரை, பிரஸ் மணி, மோகன்பாபு மற்றும் தங்க குமார், பாக்கியராஜ் ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

மேலும் ஊத்துக்கோட்டை கோதண்டராமன் அரசு நிதிபெறும் பள்ளியில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவில் பள்ளியின் தாளாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார்.  தலைமையாசிரியர் துரைசாமி முன்னிலை வகித்தார்.   இதில் 10 ம் வகுப்பில் முதல் இடம் பிடித்த மாணவன் ரஞ்சித் குமாருக்கு 2 கிராம் தங்க நாணயமும், 2 ம் இடம் பிடித்த ஜெயக்கு 1 கிராம் தங்க நாணயமும், 3ம் இடம் பிடித்த மாணவி ஜோதிஷாவிற்கு ரூ. 1100 ரொக்கப்பணத்தையும் தனது சொந்த செலவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சீனிவாசன் வழங்கினார். இதில் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஷேக்தாவுத், முன்ள் கவுன்சிலர் செல்வராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  பின்னர் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் காமராஜர் பற்றிய பேச்சி போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.இதே போல் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய வட்டார காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா வங்கனூரில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு, திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமை தாங்கி காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினார். இதேபோல் அம்மையார்குப்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் சிதம்பரம் பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.  இவ்விழாவில், மாவட்ட செயலாளர் பி.தங்கவேல், வட்டார காங்கிரஸ் தலைவர் ஏ.எம்.சொக்கலிங்கம், மாவட்ட துணை செயலாளர் ஏ.ஜி.மதிவாணன், நிர்வாகிகள் வி.ஜி.வேலு,வெங்கடேசலு,ராஜீவ்காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...