×

ஆர்.கே.பேட்டையில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்

பள்ளிப்பட்டு, ஜூலை 16 : ஆர்.கே.பேட்டை ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும்  மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ மதிப்பீடு முகாம் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமில் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களிலிருந்து 250க்கும் மேற்பட்ட மாற்றுத் திறன் கொண்ட 1 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு தேசிய அடையாள அட்டை வழங்கினர். முகாமில் பள்ளி தலைமை ஆசிரியை  உமா மகேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பலராமன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் நந்தகுமார்,வட்டார கல்வி அலுவலர் அலெக்ஸ், மாவட்ட ஒருனைணைப்பாளர் எட்வர்ட் ஹன்றி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...