×

திருத்தணி அருகே அரசு தொகுப்பு வீடுகளில் விரிசல்: ஆபத்தான நிலையில் வசிக்கும் மக்கள்

திருத்தணி ஜூலை 16: ,அரசு வழங்கிய தொகுப்பு வீடுகள் விரிசல் அடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும் என பயனாளிகள் எதிர்பார்கின்றனர். திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் ஊராட்சிக்குட்பட்ட அருந்ததி பாளையத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில், 35 பேருக்கு ஒன்றிய நிர்வாகம் சார்பில் அரசு வழங்கும் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த வீடுகள் முறையாக பராமரிப்பு இல்லாததால் தற்போது வீடுகளின் சுவர்கள் விரிசல் அடைந்தும், மேல்கூரையின் சிமென்ட் தளம் பெயர்ந்துள்ளது. இதனால் வீடுகளில் வசிக்கும் அருந்ததி பாளைய மக்கள்   அச்சத்துடன் வசித்து வருகின்றனர். எனவே ஒன்றிய நிர்வாகம் ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்கு  முன்பு பழுதடைந்த அரசு தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.    டாஸ்மாக் கடையை உடைத்து ₹9 லட்சம் கொள்ளைகும்மிடிப்பூண்டி, ஜூலை 16: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜார் அருகே தாமரை ஏரிக்குளத்தை ஒட்டி டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு சூபர்வைசராக பெரியபாளையம், நெல்வாய் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (46), சேல்ஸ்மேனாக சுரேஷ் (42) ஆகியோர் வேலை பார்க்கின்றனர். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், 2 பேரும் வீட்டுக்கு சென்றனர்.

நள்ளிரவில், கும்மிடிப்பூண்டி போலீசார் மேற்கண்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டனர். உடனடியாக சூபர்வைசர் வெங்கடேசனுக்கு தகவல் கொடுத்தனர்.அதன்பேரில் அவர் வந்து பார்த்தபோது டாஸ்மாக் கடையில் வைத்திருந்த விற்பனையான ₹9 லட்சம், 3 பெட்டிகளில் இருந்த மது பாட்டில்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டி கண்டிகை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை, ரெட்டம்பேடு சாலையில் வலைகூண்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் 2 முறை நடந்த கொள்ளையை   போலீசார் இதுவரை கண்டு பிடிக்கவில்லை.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்