×

20 கிலோ மீட்டர் தூரம் சென்று படிக்கும் மாணவர்கள் லட்சுமி நாராயணபுரம் நடுநிலைப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்: மதுராந்தகம் திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 16: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மதுராந்தகம் சு.புகழேந்தி(திமுக) துணை கேள்வி எழுப்பி பேசியதாவது:மதுராந்தகம் தொகுதியில் எல்.என்.புரம் என்று வழக்கத்தில் அழைக்கக்கூடிய லஷ்மி நாராயணபுரம் என்கிற ஊராட்சி இருக்கிறது. இந்த ஊராட்சியில் ஒரு நடுநிலைப்பள்ளி இருக்கிறது. அந்த ஊராட்சியை சுற்றி மாத்தூர், செட்டிமேடு, அரசர்கோயில், வழுவன்கொல்லை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள், மதுராந்தகம் நகரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரம் சென்று ப படிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. எனவே, நூற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கக்கூடிய நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக உயர்த்த வேண்டும். மதுராந்தகம் நகராட்சி 35,000 பொதுமக்களை கொண்ட நகராட்சி. அந்த நகராட்சியிலே அரசு மேல்நிலை பள்ளி இல்லை. உயர்நிலைப்பள்ளியும் இல்லை. மதுராந்தகம் நகரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் தள்ளி நகராட்சிக்கு உட்பட்ட நடுநிலைப்பள்ளி மட்டும் தான் உள்ளது. ஊராட்சியாக இருக்கிற மோச்சேரி என்ற பகுதி மதுராந்தகம் நகராட்சியோடு இருக்கிறது.

அந்த நகராட்சியிலே நடுநிலைப்பள்ளி மட்டும் தான் உள்ளது. மதுராந்தகத்தை சுற்றி இருக்கக்கூடிய சிலாவட்டம், பாக்கம், ஊமலை, முதுகரை, ஜமீன் என்டத்தூர் போன்ற பல்வேறு கிராமங்களை சார்ந்த மாணவர்கள் படிப்பதற்கு மதுராந்தகம் நகரத்திலே அரசு சார்பிலே உயர்நிலைப்பள்ளியும் இல்லை, மேல்நிலைப்பள்ளியும் இல்லை. எனவே எல்லன்புரம் ஊராட்சியில் இருக்கக்கூடிய நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக மாற்ற வேண்டும். அதே நேரத்தில் மதுராந்தகம் நகரத்தில் இதுவரை மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆகியவை அரசு தரப்பில் இல்லை. அதையும் உருவாக்கி தர வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: லஷ்மி நாராயணபுரம் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக மாற்ற பரிசீலிக்கப்படும். மதுராந்தகத்தில் நடுநிலைப்பள்ளி மட்டும் தான் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அதற்கான நிதியும், இடமும் இருக்குமேயேனால் இந்த ஆண்டே அதை பரிசீலனைக்கு எடுத்து சென்று உயர்நிலைபள்ளியாக மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.மதுராந்தகம் நகரத்தில் இதுவரை மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆகியவை அரசு தரப்பில் இல்லை. அதையும் உருவாக்கி தர வேண்டும்.

Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...