×

காமராஜர் பிறந்த நாள்விழா

காஞ்சிபுரம், ஜூலை 16: காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் தேமுதிக சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.காங்கிரஸ் கட்சி சார்பில், காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் மதியழகன் தலைமை தாங்கி காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நகர காங்கிரஸ் தலைவர் இராம.நீராளன், நிர்வாகிகள் லோகநாதன்,  பிரபு, பவுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், காஞ்சிபுரம் நகர தேமுதிக சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தேமுதிக நகர செயலாளர் சாட்சி சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகி அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
*  பெரும்புதூர் நகர காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர் 117வது பிறந்தநாள் விழா பெரும்புதூர் பஸ் நிலையம் அருகில் கொண்டாடப்பட்டது.

பெரும்புதூர் நகர தலைவர் அருள்ராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் வாசுதேவன் வரவேற்றார். துணை தலைவர்கள் அம்மன் குமார், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, ஆயிரம் பேருக்கு இனிப்பு வழங்கப்பட்டது.மாவட்ட துணை தலைவர்கள் தேவராஜ், ரங்கன் நாயுடு, பக்கிரிசாமி, மாவட்ட செயலாளர் கருணாகரன், துணை செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஏரிகளில் நீர் இருப்பு, கடல்நீரை...