×

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம், ஜூலை 16: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்திலுள்ள மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில்  வாராந்திர  மக்கள் குறைகேட்பு  நாள்  கூட்டம்  மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  முதியோர் ஓய்வூதிய தொகை, கல்விக்கடன், வீட்டுமனை பட்டா,  திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் ஆகிய பல  கோரிக்கைகள் அடங்கிய 280 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 10 பயனாளிகளுக்கு தலா ₹52,862 வீதம் ₹5,28,620 மதிப்பிலான மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.  பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் முதல் இடம் பெற்ற யுவராஜ், இரண்டாம் இடம் பெற்ற கமலேஷ், மூன்றாமிடம் பெற்ற நவீன் மற்றும் முதல் இடம் பெற்ற மாணவி திவ்யா, இரண்டாம் இடம் பெற்ற இரக்ஷயா, மூன்றாமிடம் ஹரிணி  ஆகியோருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி  பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் வேலைவாய்ப்புத் துறை  அருணகிரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரேவதி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஸ்ரீநாத், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர்  சுமதி, மாவட்ட ஆதிதிராடவிடர் நலத்துறை அலுவலர் தனலட்சுமி,  மாவட்ட வழங்கல் அலுவலர் கஸ்தூரி  வருவாய் வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

Tags :
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி...