ஊழியர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு தகவலால் பரபரப்பு தெருக்களில் சுற்றி வந்த போலீசார்

Advertising
Advertising

 

வேலூர் அடுத்த காட்பாடியில் ஓய்வு பெற்ற ரயில்வே வேலூர், ஜூலை 16:காட்பாடியில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதாக தகவல் வெளியானதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலின்போது பணம் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுவினர் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு ஆவணங்கள் இல்லாத பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். கடந்த 13ம் தேதி அலமேலுமங்காபுரம் புதுவசூர் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் வருமான வரித்துறை, பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ₹27.74 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், காட்பாடி கே.ஆர்.எஸ். நகரில் உள்ள ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் ஒருவர் வீட்டிற்கு நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல் வெளியானது. இதையடுத்து காட்பாடியில் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் கே.ஆர்.எஸ் நகரை சுற்றி வலம் வந்தனர். அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு குறித்து எந்தவித அறிகுறியும் தெரியவில்லை.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக காட்பாடியில் இருந்து வள்ளிமலை செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மாலை 4 மணி வரை வருமான வரித்துறையினர் சோதனை குறித்து எந்தவித தகவல் தெரியாமல் பறக்கும் படையினரும், போலீசாரும் கே.ஆர்.எஸ் நகர் நுழைவு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பறக்கும் படையினரிடம் கேட்டபோது, ‘தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு காட்பாடி கே.ஆர்.எஸ் நகரில் உள்ள ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது, அப்பகுதியில் ரயில்வே அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை அல்லது விசாரணைக்காக வர உள்ளனர். தேர்தல் பறக்கும் படையினர் யாரும் அந்த வீட்டிற்குள் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் வீட்டில் உள்ளவர்களின் நடமாட்டத்தை வெளியே இருந்து கண்காணிக்க வேண்டும். வருமான வரித்துறை அதிகாரிகள் குறித்து தகவல் தெரிவிக்கும் வரை அங்கேயே இருக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: