நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட வேலூர் மக்களவை தொகுதியில் 6 ேபர் மனுத்தாக்கல் இதுவரை 19 பேர் தாக்கல் செய்தனர்

ேவலூர், ஜூலை 16:வேலூர் மக்களவை ெதாகுதியில் ேபாட்டியிட இதுவரை 19 பேர் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், நேற்று மட்டும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 6 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி தொடங்கியது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும் 18ம் தேதி கடைசி நாளாகும். வரும் 19ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 22ம் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உள்பட 7 பேர் மனுத் தாக்கல் செய்தனர். 2ம் நாளில் 3 பேர் மட்டும் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்தனர். சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வேட்பு மனுத்தாக்கல் கிடையாது. 2 நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று வேட்பு மனுத்தாக்கல் வழக்கம் போல் தொடங்கியது. மதியம் 12 மணியளவில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் நரேஷ்குமார் தனது ஆதரவாளர்களுடன் சைக்கிளில் வந்தார். ஆனால் சைக்கிளில் உள்ளே செல்ல அனுமதி அளிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இதையடுத்து வெளியில் இருந்து நடந்து வந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரத்திடம் மனுத்தாக்கல் செய்தார்.

Advertising
Advertising

இதேபோல் முன்னாள் தாசில்தார் செல்வராஜ் சுயேச்சையாகவும், தேசிய மக்கள் கழகம் சார்பில் திவ்யாவும், இந்திய குடியரசு கட்சி (ஆர்பிஐ) சார்பில் ஆறுமுகமும், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பலராமனும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி, முற்போக்கு சமாஜ்வாடி கட்சி சார்பில் கணேசன் யாதவ் என மொத்தம் 6 பேர் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். இதுவரை 3 நாட்களில் மொத்தம் 19 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் நாளை மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்ஸ்..ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்வாரந்தோறும் திங்கட்கிழமையன்று கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது வேலூர் மக்களவை தேர்தலையொட்டி அனைத்து குறைதீர்வு கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை அறியாத பொதுமக்கள் நேற்றும் குறைதீர்வு கூட்டத்தில் மனுக்களுடன் வந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர். இதனால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Related Stories: