வேலூர் மக்களவை தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு? வாலாஜாவில் சத்யநாராயணா பேட்டி

வாலாஜா, ஜூலை 16: வேலூர் மக்களவை தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என அவரது சகோதரர் சத்யநாராயணா விளக்கம் அளித்தார்.வேலூர் மாவட்டம் வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட வாணியன்சத்திரம், அனந்தலை, வன்னிவேடு, சென்னசமுத்திரம், பாகவெளி ஆகிய 5 ஊர்களில் உள்ள பழமை வாய்ந்த குளங்களை தூர் வாரும் பணியில் ஈடுபட ரஜினி ரசிகர் மன்றத்தினர் முடிவு செய்தனர். அதன்படி இதற்கான பூமிபூஜை வாணியன்சத்திரத்தில் உள்ள குளக்கரையில் நேற்று நடந்தது.

Advertising
Advertising

இதில் ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்யநாராயணா கலந்துகொண்டு பூஜை செய்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் நீர்நிலைகளை பாதுகாப்பதுடன் குளங்கள், கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கும் பணி கடந்த 2 மாதமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இங்கு பூமி பூஜையுடன் தொடங்கியது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் யாருக்கும் ரஜினியின் ஆதரவு இல்லை. மேலும் கடவுள் அருளாலும், குரு அருளாலும் விரைவில் அரசியல் பிரவேசம் செய்வார். எப்போது வருவார் என அவர்தான் முடிவு செய்யவேண்டும். ரஜினி கட்சியை ஆரம்பித்து பாஜகவுக்கு ஆதரவளிப்பாரா? என்பதையும் அவர்தான் முடிவு செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: