பொதுமக்கள் எதிர்பார்ப்பு காமராஜர் பிறந்த நாள் விழா

கும்பகோணம், ஜூலை 16: தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ்கட்சி விவசாயி பிரிவு சார்பில் மாவட்ட விவசாய பிரிவு தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர மூப்பனார் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் , காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்தார்.தஞ்சை: தஞ்சையில் காமராஜர் பிறந்த நாளையொட்டி தஞ்சை ரயிலடியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். காமராஜரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர். வல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதேபோல் புதிய பேருந்து நிலையம், மாரியம்மன்கோயில் போன்ற பகுதிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

Advertising
Advertising

Related Stories: