பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

தஞ்சை, ஜூலை 16: தஞ்சை பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா கடந்த 10ம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக பாரத் கல்விக் குழுமத்தின் செயலாளர் புனிதா கணேசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பாரத் கல்லூரியின் முதல்வர் முனைவர் வீராசாமி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியின் புலத்தலைவர், பேராசிரியர் மருத்துவர் குமுதா லிங்கராஜ் பட்டமளிப்பு விழா பேருரையாற்றுகையில், “கல்லூரி செங்கல்லால் கட்டப்பட்ட கட்டிடமல்ல. மாணவர்களின் செயல்பாடுகளால்தான் கல்லூரி சிறப்பு பெறுகிறது. பெற்றோர்களின் ஆசிர்வாதமே மாணவர்களை உயர்த்துகிறது. மாணவர்கள் பெற்றோரை என்றும் மறக்கக் கூடாது. அவர்களை முதியோர் இல்லத்தில் விடுவதை தவிர்த்து அவர்களை என்றும் அன்போடு பாதுகாக்க வேண்டும். நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்வது அவசியம். அதுவே உங்களை உயர்த்தும் என்று கூறினார். தொடர்ந்து பாரத் கல்லூரியின் மாணவர்கள் 637 பேருக்கும், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கேட்டரிங் டெக்னாலஜி அண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் 180 பேருக்கும் என மொத்தம் 817 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். இதில் 34 மாணவர்கள் பல்கலைக் கழக தரவரிசை பட்டியலில் சிறப்பிடம் பெற்றிருந்தனர். முதல்வர் உறுதிமொழி வாசிக்க பட்டம் பெற்ற மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Related Stories: