உலக திருக்குறள் மைய கூட்டம்

பாபநாசம், ஜூலை 16: உலகத் திருக்குறள் மையம் சார்பில் மாதக் கூட்டம் நடைபெற்றது. உலகத் திருக்குறள் மைய 260 வது மாதக் கூட்டம் பாபநாசம் பட்டுக் கோட்டை அழகிரி தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஓய்வு ஆசிரியர் கலைச் செல்வன் தலைமை வகித்தார். கூட்டத்தில் இல்லறமே நல்லறம் என்றத் தலைப்பில் பெரிய சாமியும், அன்பின் ஆற்றல் என்றத் தலைப்பில் விஜய குமாரும், ஈகையும், சேவையும் என்றத் தலைப்பில் சசியும், மா மழை போற்றுவோம் என்றத் தலைப்பில் அறிவழகனும் பேசினர். கூட்டத்தில் ஜெயராமன், சங்கர், அன்பழகன், ரகுபதி, குருசாமி, சுதா, தில்லைநாயகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: