411 மனுக்கள் குவிந்தன தஞ்சையில் எலக்ட்ரானிக் கடை குடோனில் டிவிக்கள் திருடிய 3 ஊழியர்கள் 3 கைது

தஞ்சை, ஜூலை 16: தஞ்சையில் எலக்ட்ரானிக் கடை குடோனில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள டிவிக்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.தஞ்சை அண்ணாநகர் 12வது தெருவைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன்கள் தினகரன், செந்தில்குமார். மோகன் மற்றும் இவரது மகன்களுக்கு சொந்தமாக தஞ்சை பர்மா பஜார், ஆபிரகாம் பண்டிதர் சாலை, மருத்துவக் கல்லூரி சாலை போன்ற பகுதிகளில் எலக்ட்ரானிக் கடைகள் உள்ளன.அண்ணா நகர் அருகே இக்கடைகளுக்கான குடோன் உள்ளது. இங்கு டி.வி., கம்ப்யூட்டர், வாசிங் மெஷின், ஏசி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் இருப்பில் வைப்பது வழக்கம். கடைகளில் பொருட்கள் விற்பனை ஆகிவிட்டால் குடோனிலிருந்து பொருட்களை ஊழியர்கள் எடுத்து வந்து கடையில் விற்பனைக்கு வைப்பார்கள். இந்நிலையில் குடோனில் மோகன் மற்றும் அவரது மகன்கள் செந்தில், தினகரன் ஆகியோர் இருப்பை சரி பார்த்தபோது 10க்கும் மேற்பட்ட எல்இடி டிவிக்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.50 லட்சம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து தினகரன் தஞ்சை தெற்கு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இவரது கடையில் பணியாற்றிய தஞ்சை கோரிகுளத்தை சேர்ந்த சந்தோஷ்(22), அண்ணாநகர் 10வது தெருவை சேர்ந்த கார்த்திக்(23), சேகர் காலனியை சேர்ந்த எட்வின்ராஜ்(22) ஆகியோர் கடைகளுக்கு பொருட்களை எடுத்து வரும்போது யாருக்கும் தெரியாமல் டிவி க்களை திருடி விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.

ஒரு வருடமாக குடிநீர் வரவில்லை மாற்றுத்திறனாளி கோஷம்திருவையாறு அருகே திருவாலம்பொழில் அம்பலக்காரத்தெருவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிச்சை மகன் பாலு நேற்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் திடீரென கோஷம் எழுப்பியப்படி உள்ளே நுழைய முயன்றார். அவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். அப்போது பாலுவின் மனைவி சாந்தியும் கோஷம் எழுப்பினார். இதையடுத்து இருவரையும் காவல்நிலையத்துக்கு போலீசார் கொண்டு சென்றனர். முன்னதாக கலெக்டரிடம் அளித்த மனுவில், எங்கள் வீட்டு குடிநீர் இணைப்பில் ஒரு வருடமாக குடிநீர் வரவில்லை. இது குறித்து திருவையாறு வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட வட்டார வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் பல முறையிட்டும் நடவடிக்கை இல்லை. எனவே உடனடியாக குடிநீர் இணைப்பிற்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: