பெண் உள்பட 4 பேருக்கு வலை தஞ்சை மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

தஞ்சை, ஜூலை 16: தஞ்சை மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 411 மனுக்களை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையிடம் பொதுமக்கள் நேரில் அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் இம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கும்படி உத்தரவிட்டார். கூட்டத்தில், மீன்வளத்துறையின் மூலம் சுனாமிக்கு பிந்தைய நிலைத்த வாழ்வாதார திட்டத்தின்கீழ் காப்பீடு செய்த 41 மீனவர்களுக்கு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீன் பிடி உடமைகளுக்கான காப்பீட்டு திட்டத்தின்கீழ் ரூ.4.75 லட்சம் காப்பீட்டு தொகையையும், ஒரத்தநாடு வட்டம் பேய்கரம்பன்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தமையால் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து அவரது மனைவி அன்னகொடிக்கு ரூ.3 லட்சத்திற்கான காசோலையையும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், டி.ஆர்.ஓ.சக்திவேல், மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவகுமார், சுனாமிக்கு பிந்தைய நிலைத்த வாழ்வாதார திட்ட மாவட்ட செயலாக்க அலுவலர் செல்வம் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: