மக்கள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல் சேதுபாவாசத்திரம் அருகே முன் விரோத தகராறில் 3 பேருக்கு கத்திக்குத்து

சேதுபாவாசத்திரம், ஜூலை 16: சேதுபாவாசத்திரம் அருகே முன்விரோத தகராறில் கத்தியால் குத்தியதில் 3 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள மல்லிப்பட்டிணத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி(56). சலவை தொழிலாளி. இவருக்கும் இவரது தம்பி நாகராஜின் மனைவி மலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இருவரது வீடும் அருகருகே உள்ளதால் தொடர்ந்து அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல் நேற்று முன்தினம் சின்னதம்பிக்கும், மலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்கனவே சின்னத்தம்பியை தாக்குவதற்கு நாகராஜின் மனைவி மலர் தயார் செய்து வைத்திருந்த அவரது குடும்ப நண்பரான தில்லங்காட்டை சேர்ந்த லெட்சுமணன் மற்றும் பெயர் தெரியாத அவரது நண்பர்கள் இருவர் உள்பட மூன்று பேரும் சேர்ந்து சின்னத்தம்பி, அவரது மனைவி முனியம்மாள், மகன் மணிகண்டன் ஆகியோரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மூன்று பேரும் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சின்னத்தம்பி கொடுத்த புகாரின்பேரில் சேதுபாவாசத்திரம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தலைமறைவான மலர், லெட்சுமணன் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: