×

கீழ்வேளூரில் இடி மின்னலுடன் கனமழை

கீழ்வேளூர், ஜூலை 16: நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி கஜா புயல் அன்று மழை பெய்தது. பின்னர் மழை பெய்யாத நிலையில் வெயில் தாக்கம் அதிகமானது. குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், மரம், செடிகளுக்கு தண்ணீர் இல்லாமல் கருகியது. வயல், வரப்புகளில் புற்கள் கருகியது. இதனால் ஆடு, மாடுகளுக்கு பசும் புல் இல்லாமல் கருகிய புட்களையே ஆடு, மாடுகள் மேய வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு 9 மணிக்கு கீழ்வேளூர் மற்றும் சுற்று பகுதியில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. கடுமையான வெப்பத்தில் கடந்த 8 மாதமாக தவித்து வந்த மக்கள் மழையால் ஏற்பட்ட குளிர்ச்சியால் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் காவிரி டெல்டா பகுதியில் தற்போது ஒரு போக சம்பா சாகுபடி அதுவும் நேரடி நெல் விதைப்பு என்பதால் கோடை உழவு செய்து அதில் நெல் விதைப்பு செய்ய வேண்டும். ஆனால் மழை இல்லாததால் விவசாயிகள் வயல்களில் உழவு பணி செய்யாமல் இந்த ஆண்டு விவசாயம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் இருந்தனர்.இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது. வயல்களில் ஏற்பட்ட வெடிப்புகள் மூடும் அளவிற்கு மழை பெய்தது. இந்த மழை கோடை உழவு செய்ய போதுமானதாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags :
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது