×

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

சீர்காழி, ஜூலை 16: ஆலய கட்டண தரிசனத்தை ரத்து செய்யக்கோரி சீர்காழி இந்து முன்னணி சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம், சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். சீர்காழி நகர தலைவர் ஆனந்தன், கொள்ளிடம் ஒன்றிய தலைவர் அனந்தராமன், வேலு முன்னிலை  வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பாஜக நகரத் தலைவர் செல்வம் முருகேசன், இந்து முன்னணி கொள்ளிடம் ராம் மணிகண்டன் மற்றும் பல இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம்...