×

காரைக்காலில் இந்து கோயிலிலிருந்து அரசாங்கத்தை வெளியேற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

காரைக்கால், ஜூலை16: இந்து கோயில்களிலிருந்து அரசாங்கத்தை வெளியேறக் கோரி, காரைக்காலில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்து கோயில்களிலிருந்து அரசாங்கத்தை வெளியேறக் கோரி, நாடு முழுவதும் இந்து முன்னணி நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் பழைய ரயில் நிலையம் அருகே, மாவட்ட இந்து முன்னணி சார்பில், அதன் துணைத் தலைவர் வெங்கடாசலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், சிறப்புரையாற்றிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் அருள் முருகன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறையின் சீர்கேடுகளையும் டெம்பிள் சிட்டி என்ற பெயரில் திருநள்ளாற்றில் கோயில் பணம் வீணடிக்கப்படுவதையும் எடுத்துக் கூறினார்.

கோயிலுக்கு வரும் பக்தர்களின், நன்கொடைகள், உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் கோயில் பராமரிப்பிற்கும், பக்தர்களின் வசதிக்கும் பயன்படுத்தப்படாமல் அரசாங்கம் தங்களுடைய திட்டங்களுக்கு பயன்படுத்தி கொள்வதாக குற்றம் சாட்டினார். எனவே அரசாங்கம் கோயில்களிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆர்ப்பாட்டத்தில்,இந்து முன்னணி நகரத் தலைவர் ஜெய்சங்கர், துணைத் தலைவர் வைத்தியநாதன், பொதுச் செயலாளர் சிவக்குமார், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் முருகதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரையும் துணைத்தலைவர் மணிகண்டன் வரவேற்றார். செயலாளர் குமார் நன்றி கூறினார்.

Tags :
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்