×

கருங்கல் அருகே வீடுபுகுந்து திருடிய சட்டக்கல்லூரி மாணவன் சிறையில் அடைப்பு

கருங்கல், ஜூலை 16: கருங்கலை அடுத்த ெதாலையாவட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். கடந்த 13ம் தேதி நள்ளிரவு இவரது வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், சுரேஷ்குமாரின் மனைவி கழுத்தில் அணிந்திருந்த ஏழரை பவுன் செயினை நைசாக கட்டர் வைத்து வெட்டி எடுத்துச் சென்றனர்.இதேபோல் தொலையாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் தாலுகா அலுவலகம் பகுதியை சேர்ந்தவர் மரியதாஸ் வீட்டில் புகுந்த மர்ம நபர், அவரது மனைவி அணிந்திருந்த செயினை கட்டர் மூலம் வெட்டிய போது அவர் விழித்துக்கொண்டார். இதனால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.அதன்பின் அருகில் உள்ள மனோன்மணி என்பவர் வீட்டில் அதே மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது வீட்டில் இருந்தவர்கள் விழித்து சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் அவர்களை துரத்தி பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் பிடிபட்டார். மற்றொருவர் தப்பியோடினார்.பிடிபட்டவரின் பாக்கெட்டில், சுரேஷ்குமார் மனைவி கழுத்தில் இருந்து வெட்டி எடுத்த தங்க செயின் இருந்தது. இதையடுத்து அவரை நையபுடைத்த ெபாதுமக்கள் கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில், அவர் நித்திரவிளை அடுத்த எஸ்.டி. மங்காடு பகுதியை சேர்ந்த எட்வின் ஜோஸ் (27) என தெரியவந்தது.

களியக்காவிளை அருகே கேரள எல்லைப்பகுதியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான இவர் மீது குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவ்வப்போது மார்பிள் வேலைக்கு செல்லும் இவர், வசதியான வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரங்களில் நண்பர்களுடன் சேர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து எட்வின் ஜோசை அன்று இரவே போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், நேற்று கிள்ளியூரில் மறைவான இடத்தில் பைக் ஒன்று அனாதையாக நிறுத்தப்பட்டிருந்ததை கண்ட ெபாதுமக்கள் கருங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பைக்கை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், பிடிபட்ட எட்வின் ஜோஸ் மற்றும் அவரது கூட்டாளி வந்த பைக் என தெரியவந்தது. இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று இரவு கம்பிளார், மாதாபுரம் பகுதிகளிலும் 2 வீடுகளில் கதவை உடைத்து திருட்டு முயற்சி நடந்துள்ளது. இதனிடையே எட்வின் ஜோசை போலீசார் நீதிமன்ற அனுமதி பெற்று கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Tags :
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு