பாலபாலகோபாலபுரம் வீதியில் நகராட்சி பள்ளி பழைய கட்டிடத்தில் அரங்கேறும் சமூக விரோத செயல்கள்கோபாலபுரம் வீதியில் நகராட்சி பள்ளி பழைய கட்டிடத்தில் அரங்கேறும் சமூக விரோத செயல்கள்

பொள்ளாச்சி, ஜூலை 12:   பொள்ளாச்சி நகரில் மத்திய பகுதியில், குடியிருப்புகள் மிகுந்த இடத்தில் உள்ள பாலகோபாலபுரம் வீதியில், நகராட்சி நடுநிலை பள்ளியானது 1946ஆண்டு முதல் செயல்பட்டது.  முதலில் ஓட்டுக்கூரையாக இருந்தது. பின் அதன் அருகே சிமென்ட் சீட்போடப்பட்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டன. ஒன்றுமுதல் 8ம் வகுப்பு வரையிலும் செயல்பட்ட அந்த பள்ளியில், ஆரம்பத்தில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது.  ஆனால் நாளடைவில் இப்பள்ளி முறையான பராமரிப்பு இல்லாமல் போயிற்று. அடிப்படை வசதிகள் குறைந்ததால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை, இப்பள்ளியில் படிக்க வைக்க தயக்கம் காட்டினர்.  இதையடுத்து, இப்பள்ளியின் முன்பு இருந்த  விளையாட்டு மைதானம் கழிவறைகள்  பராமரிப்பு இல்லாமல் போனதாலும். ஓட்டுக்கூரை கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததாலும், எதிரே செயல்படும் நகராட்சிக்குட்பட்ட மற்றொரு கட்டிடத்தில் புதுபிக்கப்பட்ட இடத்தில் அப்பள்ளி மாற்றியமைக்கப்பட்டது.  இதையடுத்து பழைய பள்ளி இடமானது, அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக அங்கு எந்த பணியும் நடைபெறாமல் உள்ளது. இதனால் பாலகோபாலபுரம் வீதியில்,  செயல்படாத பழைய நகராட்சி பள்ளி கட்டிடத்தின் பெரும் பகுதி புதர்கள் சூழ்ந்து விஷ ஜந்துகள் நடமாடும் இடமாக மாறியுள்ளது.

இருப்பினும்,  இரவுநேரத்தில் சமூகவிரோதிகள் புகுந்து மது அருந்தி விட்டு செல்வதாக கூறப்படுகிறது.  மேலும், செயல்படாத பள்ளி  வகுப்பறை கதவுகளை உடைத்து உள்ளே சென்று விடுகின்றனர்.  பாழடைந்தவாறு கிடக்கும், பழைய நகராட்சி பள்ளி கட்டிட இடத்தை முறையாக பராமரித்து சமூகவிரோதிகள் தங்கி செல்வதை தடுக்க, அரசு மருத்துவமனையின் தேவைக்கான கட்டிடம் கட்டி விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: