விதைச்சான்று உதவி இயக்குனர் அலுவலகம் திறப்பு

திருப்பூர், ஜூலை 12: திருப்பூரில் 11 ஆண்டுகளுக்கு பின் விதைச்சான்றுத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் துவங்கப்பட்டுள்ளதால் விதை உற்பத்தியாளர்கள், விவசாயிகள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களின் ஒருசில பகுதிகளை பிரித்து புதிதாக திருப்பூர் மாவட்டம் கடந்த 2008ம் ஆண்டு ஆண்டு துவங்கப்பட்டது. இதனைசார்ந்த கிராமங்களில்  நெல், கரும்பு, மக்காச்சோளம் உட்பட பல்வேறு உணவு தானிய பொருட்களை விவசாயிகள் சாகுபடி செய்தனர். தாராபுரம், உடுமலை, காங்கேயம் ஆகிய பகுதிகளில் விதைநெல் உற்பத்தி நிலையங்கள்

ஏராளமாக உள்ளது. விதைகளை ஆய்வு செய்ய விதை உற்பத்தியார்கள் ஒவ்வொரு முறையும் ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளுக்கு எடுத்துச்சென்று விதை சான்றுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றுகள் பெற்ற பின் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

 இதனால், விதை உற்பத்தியாளர்களுக்கு காலதாமதம் ஆவதோடு பல நாட்களாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் விதைச்சான்றுத்துறை அலுவலகம் தொடங்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்குத் தீர்வாக உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், பல்லடம், பொங்கலுார், திருப்பூர், அவினாசி, ஊத்துக்குளி, காங்கேயம், வெள்ளக்கோவில், மூலனுார், தாராபுரம், குண்டடம் ஆகிய 13 வட்டாரங்களை உள்ளடக்கிய திருப்பூரில் பல்லடம் ரோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வேளாண்மை விற்பனைக்குழு வளாகத்தில்  விதைச்சான்று துறை உதவி இயக்குனர்  அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது. விதை சான்று உதவி இயக்குனர்அலுவலகம் துவங்கப்பட்டுள்ளதால் விதை உற்பத்தியாளர்கள்,விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: