மாநிலங்களவை உறுப்பினராக சண்முகம் தேர்வு திருப்பூர் மாவட்ட தொமுச வாழ்த்து

திருப்பூர், ஜூலை 12: மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தொமுச பேரவை பொது செயலாளர் சண்முகத்திற்கு திருப்பூர் மாவட்ட தொமுச சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் பொது செயலாளர் ரங்கசாமி தலைமையில் செயலாளர் சரவணன் உள்ளிட்ட மாநில, மாவட்ட முக்கிய நிர்வாகிகள், மற்றும் மின்வாரிய தொழிலாளர்கள் சென்னை சென்று மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தொமுச., பேரவை அகில இந்திய பொது செயலாளர் சண்முகத்தை  சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பூர் மாவட்ட தொமுச சார்பில் நன்றிகளும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: