மழைநீர் தொட்டி அமைக்க ரூ.7 ஆயிரம் மானியம்

உடுமலை, ஜூலை 12: தமிழகம் முழுவதும் வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்கட்டமாக அனைத்து அரசு கட்டிடங்களிலும் மழைநீர் தொட்டி அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. உடுமலை நகராட்சி, ஊராட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலகங்களில் இப்பணி நடக்கிறது. கண்ணமநாயக்கனூர் ஊராட்சி அலுவலக வளாகத்தில் மாதிரி மழைநீர்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் மழைநீர் தொட்டி அமைக்க அரசு ரூ.7 ஆயிரம் மானியம் வழங்குகிறது. இதற்கான கணக்கெடுப்பு பணி ஊராட்சியில் நடந்து வருகிறது. இரு மாதங்களில் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: